TNPSC| வ.உ.சிதம்பரனார்| TNPSC TAMIL
வ.உ.சிதம்பரனார்
1. வ.உ.சியின் பன்முகத்தன்மை என்ன என்ன? வழக்கறிஞர்,
எழுத்தாளர்,பேச்சாளர், தொழிற்சங்கத்தலைவர்
2. வ.உ.சி அறிந்த மொழிகள் யாவை? தமிழ், ஆங்கிலம்
3. இந்திய கப்பல் நிறுவனத்தை தொடங்கியவர் யார்? வ.உ.சி
4. வ.உ.சி சென்னை செல்லும்போது யாரை சந்திப்பதை வழக்கமாகக்
கொண்டிருந்தார்? பாரதியார்
5. வ.உ.சி “சுதேசி நாவாய் சங்கம்” என்ற நிறுவனத்தை எப்போது பதிவு
செய்தார்? 19௦6 ஆம் ஆண்டு அக்டோபர் 16 அன்று
6.
கப்பலோட்டிய
தமிழர் யார்? சிதம்பரனார்
7.
கொற்கை
பெருந்துறையின் வழித்தோன்றல் துறைமுகம் எது? தூத்துக்குடி
துறைமுகம்
8.
கொற்கை
துறைமுகத்தில் யாருடைய கொடி பறந்தது? பாண்டிய மன்னர்களின்
கொடி
9.
சுதேசக்
கப்பல் கம்பெனியை உருவாக்கியவர் யார்? சிதம்பரனார்
10. சுதேசக் கப்பல் கம்பெனியின் தலைவர் யார்? பாண்டித்துரையார்
11. சுதேசக் கப்பல் கம்பெனியின் செயலாளர் யார்? சிதம்பரனார்
12. சுதேசக் கப்பல் வெள்ளோட்டம் பார்பதற்காக எந்த துறைமுகத்தை நோக்கிச்
சென்றது? கொழும்புத் துறைமுகம்
13. வந்தே மாதரம் என்ற சுதேச மந்திரம் எந்த நாட்டில் பிறந்தது? வங்க நாட்டில்
14. சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன் என்றவர் யார்? பாலகங்காதர திலகர்
15. வந்தே மாதரம் என்போம், எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம் என்று
பாடியவர் யார்? பாரதியார்
16. சிதம்பரனாருக்கு இரட்டை வாழ்நாள் சிறைதண்டனை வழங்கிய நீதிபதி யார்? பின்ஹே
17. பின்ஹேவின் கூற்று என்ன? சிதம்பரனாரின்
பிரசங்கத்தையும் பாரதியாரின் பாடல்களையும் கேட்டால் செத்த பிணம் உயிர் பெற்று
எழும். புரட்சி ஓங்கும். ஐந்தே நிமிடங்களில் அடிமைப்பட்ட நாடு விடுதலை பெறும்
18. சிதம்பரனார் எந்த எந்த சிறைச் சாலைகளில் கொடும் பணி செய்தார்? கோவை மற்றும் கண்ணூர் சிறைச் சாலைகளில்
19. சிதம்பரனார் செய்த தொழில் என்ன? வக்கீல்
தொழில்
20. சிதம்பரனார் யாருடன் உறவு கொண்டு செந்தமிழ் நூல்களை கற்றார்? பாண்டித்துரையாருடன்
21. சிதம்பரனார் எதை படித்து தொல்லையெல்லாம் மறந்தார்? தொல்காப்பியம்
22. சிதம்பரனார் எதை படித்து இன்னல்களையெல்லாம் மறந்தார்? இன்னிலை
23. சிதம்பரனார் எந்த நூலை தமிழில் மொழி பெயர்த்தார்? ஆலன் என்பவர் ஆங்கிலத்தில் இயற்றிய நூலை – மனம் போல் வாழ்வு
24. சிதம்பரனார் இயற்றிய நூல்கள் யாவை? மெய்யறிவு,
மெய்யறம்
25. சிதம்பரனார் பெற்ற சிறைதண்டனை காலம் எவ்வளவு? 6 ஆண்டுகள்
Comments
Post a Comment