TNPSC| வள்ளலார் |வைகுண்ட சுவாமிகள் |அயோத்தியதாச பண்டிதர்| TNPSC TAMILNADU ADMINISTRATION PDF


வள்ளலார்,வைகுண்ட சுவாமிகள், அயோத்தியதாச பண்டிதர்
1)      ராமலிங்க சுவாமிகள் எவ்வாறு அழைக்கப்பட்டார்? வள்ளலார்
2)      வள்ளலார் காலம் என்ன? 1823-1874
3)      வள்ளலார் எந்த ஊரில் பிறந்தார்? மருதூர் , சிதம்பரம் அருகே
4)      ஜீவகாருண்யம் என்றால் என்ன? அனைத்து உயரிகளிடமும் அன்பு
5)      வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க சத்ய சங்கத்தை எந்த ஆண்டு நிறுவினார்? 1856
6)      வள்ளலார் சத்ய ஞான சபையை எங்கு நிறுவினார்? வடலூர்
7)      வள்ளலார் அனைத்து மக்களுக்குமான இலவச உணவகத்தை எங்கு நிறுவினார்? வடலூர், 1867
8)      வள்ளலாரின் பாடல்கள் எவ்வாறு தொகுக்கப்பட்டன? திருவருட்பா
9)      வள்ளலாரின் பாடல்களை மருட்பா என அழைத்தவர்கள் யாவர்? பழமை வாய்ந்த சைவர்கள் (அறியாமையின் பாடல்)
10)  வைகுண்ட சுவாமிகள் எங்கு பிறந்தார்? கன்னியாகுமரி, சாமித்தோப்பு என்ற சாஸ்தாகோவில்விளை
11)  வைகுண்ட சுவாமிகள் காலம் என்ன? 18௦9 – 1851
12)  வைகுண்ட சுவாமிகளின் இயற்பெயர் என்ன? முடிசூடும் பெருமாள் (முத்துக்குட்டி)
13)  வைகுண்ட சுவாமிகள் யாருடைய ஆட்சியை விமர்சித்தார்?
ஆங்கில ஆட்சியை           -     வெள்ளைப் பிசாசுகளின் ஆட்சி
திருவிதாங்கூர் ஆட்சியை -  கருப்பு பிசாசுகளின் ஆட்சி
14)  வைகுண்ட சுவாமிகள் எந்த ஆண்டு தியானத்தை தொடங்கினார்? 1833
15)  வைகுண்ட சுவாமிகள் எந்த அமைப்பை நிறுவினார்? சமத்துவ சமாஜம்
16)  வைகுண்ட சுவாமிகள் எவ்வாறு அழைக்கப்பட்டார்? அய்யா (சமய வழிபாடு அய்யா வழி)
17)  வைகுண்ட சுவாமிகள் கருத்துகள் தொகுக்கப்பட்ட நூலின் பெயர் என்ன? அகிலத்திரட்டு
18)  அயோதியதாசப் பண்டிதர் எந்த மொழிகளில் புலமை பெற்றிருந்தார்? தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம்
19)  ஒடுக்கப்பட்டவர்களுக்கு பள்ளிகள் திறக்க உந்து சக்தியாக திகழந்தவர் யார்? அயோத்தியதாசப் பண்டிதர்
20)  அயோத்தியதாசப் பண்டிதர் நிறுவிய அமைப்பின் பெயர் என்ன? அத்வைதானந்தா சபா
21)  அயோத்தியதாசப் பண்டிதர் யாருடன் இணைந்து திராவிடர்க் கழகம் என்ற அமைப்பை உருவாக்கினார்? ஜான் திரவியம், 1882 ல்
22)  அயோத்தியதாசப் பண்டிதர் 1885 ல் எந்த இதழைத் தொடங்கினார்? திராவிட பாண்டியன்
23)  அயோத்தியதாசப் பண்டிதர் “திராவிட மகாஜன சபை” என்ற அமைப்பை எந்த ஆண்டு தொங்கினார்?  1891 (முதல் மாநாடு நீலகிரி)
24)  ஒரு பைசாத் தமிழன் என்ற இதழை நடத்தியவர் யார்? அயோத்தியதாசப் பண்டிதர் (19௦7 முதல் 1914 வரை)
25)  யாருடைய தாக்கத்தால் அயோத்தியதாசப் பண்டிதர் பெளத்த மதத்தை தழுவினார்? ஆல்காட் (1898 ல் இலங்கை சென்று)
26)  சென்னையில் சாக்கிய பெளத்த சங்கம் என்ற அமைப்பை நிறுவியவர் யார்? அயோத்தியதாசப் பண்டிதர், 1898 ல்
27)  மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது சாதியற்ற திராவிடர்கள் என பதிவு செய்ய வற்புறுத்தியவர் யார்? அயோத்தியதாசப் பண்டிதர்
28)  அயோத்தியதாசப் பண்டிதர் –சித்த மருத்துவர், அறிஞர், பத்திரிக்கையாளர்


Comments

Popular posts from this blog

LAB ASSISTANT EXAM ONLINE TEST 21 - 7TH STD SCIENCE - அணு

TNPSC GROUP 2/4 REVISION 01 - சிந்து சமவெளி நாகரிகம் -தமிழக பண்டைய நகரங்கள்