8ம் வகுப்பு தமிழ் இலக்கணம் - புதிய முறையில் தேர்வு

1. இதழ்களைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள் _____
A.இ, ஈ
B. உ, ஊ
C.எ, ஏ
D.அ, ஆ

:

2. ஆய்த எழுத்து பிறக்கும் இடம் ____
A.மார்பு
B.கழுத்து
C.தலை
D.மூக்கு

:

3. வல்லின எழுத்துகள் பிறக்கும் இடம் ____
A.தலை
B.மார்பு
C.மூக்கு
D.கழுத்து

:

4. நாவின் நுனி, அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள் _____
A.க், ங்
B.ச், ஞ்
C.ட், ண்
D.ப், ம்

:

5. கீழ்இதழும் மேல்வாய்ப்பல்லும் இணைவதால் பிறக்கும் எழுத்து ____
A.ம்
B.ப்
C.ய்
D.வ்

:

6. மாடு வயலில் புல்லை மேய்ந்தது. – இத்தொடரிலுள்ள வினைமுற்று ____
A.மாடு
B.வயல்
C.புல்
D.மேய்ந்தது

:

7. பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று ____
A.படித்தான்
B.நடக்கிறான்
C.உண்பான்
D.ஓடாது

:

8. பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்றுச் சொல் ___
A.செல்க
B.ஓடு
C.வாழ்க
D.வாழிய

:

9. முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் ____ எனப்படும்
A.முற்று
B.எச்சம்
C.முற்றெச்சம்
D.வினையெச்சம்

:

10. கீழ்க்காணும் சொற்களில் பெயரெச்சம் ____
A.படித்து
B.எழுதி
C.வந்து
D.பார்த்த

:

11. குறிப்பு வினையெச்சம் _____ வெளிப்படையாகக் காட்டாது

A.காலத்தை
B.வினையை
C.பண்பினை
D.பெயரை
:

12. பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது _____ ஆகும்
A.எழுவாய்
B.செயப்படுபொருள்
C.பயனிலை
D.வேற்றுமை

:

13. எட்டாம் வேற்றுமை _____ வேற்றுமை என்று அழைக்கப்படுகிறது
A.எழுவாய்
B.செயப்படுபொருள்
C.விளி
D.பயனிலை

:

14. உடனிகழ்ச்சிப் பொருளில் ____ வேற்றுமை வரும்
A.மூன்றாம்
B.நான்காம்
C.ஐந்தாம்
D.ஆறாம்

:

15. ‘அறத்தான் வருவதே இன்பம்’ – இத்தொடரில் _____வேற்றுமை பயின்று வந்துள்ளது
A.இரண்டாம்
B.மூன்றாம்
C.ஆறாம்
D.ஏழாம்

:

16. ‘மலர் பானையை வனைந்தாள்’ – இத்தொடர் ____ பொருளைக் குறிக்கிறது
A.ஆக்கல்
B.அழித்தல்
C.கொடை
D.அடைதல்

:

17. சொற்களுக்கு இடையே வேற்றுமை உருபு மறைந்து வருவது ____
A.வேற்றுமைத்தொகை
B.உம்மைத்தொகை
C.உவமைத்தொகை
D.அன்மொழித்தொகை

:

18.‘செம்மரம்’ என்னும் சொல் ____ த்தொகை
A.வினை
B.பண்பு
C.அன்மொழி
D.உம்மை

:

19. ‘கண்ணா வா!’ – என்பது _____த் தொடர்
A.எழுவாய்
B.விளி
C.வினைமுற்று
D.வேற்றுமை

:

20. விகாரப் புணர்ச்சி ____ வகைப்படும்
A.ஐந்து
B.நான்கு
C.மூன்று
D.இரண்டு

:

21. ‘பாலாடை’ – இச்சொல்லுக்குரிய புணர்ச்சி _____
A.இயல்பு
B.தோன்றல்
C.திரிதல்
D.கெடுதல்

:

22. பிறிதுமொழிதல் அணியில் _____ மட்டும் இடம்பெறும்
A.உவமை
B.உவமேயம்
C.தொடை
D.சந்தம்

:

23. இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையையும் வேற்றுமையையும் கூறுவது ____ அணி
A.ஒற்றுமை
B.வேற்றுமை
C.சிலேடை
D.இரட்டுற மொழிதல்

:

24. ஒரே செய்யுளை இருபொருள் படும்படி பாடுவது ____ அணி
A.பிறிதுமொழிதல்
B.இரட்டுறமொழிதல்
C.இயல்பு நவிற்சி
D.உயர்வு நவிற்சி

:

25. இரட்டுறமொழிதல் அணியின் வேறு பெயர் ____ அணி
A.பிறிதுமொழிதல்
B.வேற்றுமை
C.உவமை
D.சிலேடை

:

26. அசை _____ வகைப்படும்
A.இரண்டு
B.மூன்று
C.நான்கு
D.ஐந்து

:

27. விடும் என்பது _____ சீர்
A.நேரசை
B.நிரையசை
C.மூவசை
D.நாலசை

:

28. அடி _____ வகைப்படும்
A.இரண்டு
B.நான்கு
C.எட்டு
D.ஐந்து

:

29. முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது _____
A.எதுகை
B.இயைபு
C.அந்தாதி
D.மோனை

:

30. எழுதிய பாடல்
A.பெயரச்சத் தொடர்
B.வினையெச்சத் தொடர்
C.எழுவாய்த் தொடர்
D.வினைமுற்றுத் தொடர்

:

Comments

Popular posts from this blog

LAB ASSISTANT EXAM ONLINE TEST 21 - 7TH STD SCIENCE - அணு

TNPSC GROUP 2/4 REVISION 01 - சிந்து சமவெளி நாகரிகம் -தமிழக பண்டைய நகரங்கள்